தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கர்நாடகாவில் கனமழை... கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

கிருஷ்ணகிரி: கர்நாடகாவின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் ஓசூர் அடுத்த கெலவரப்பள்ளி நீர்தேக்க அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

கிருஷ்ணகிரி செய்திகள்  கெலவரப்பள்ளி நீர்த் தேக்க அணை  krishnagiri news  Kelavarapalli Dam
கர்நாடாகவில் கனமழை.. கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

By

Published : Jul 22, 2020, 1:02 PM IST

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே அமைந்துள்ளது கெலவரப்பள்ளி நீர் தேக்க அணை. தென்பெண்ணை ஆற்றிலிருந்து வரும் நீர் கெலவரப்பள்ளி அணையில் சேமிக்கப்படுகிறது. கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நேற்று (ஜூலை 21) பெய்த கனமழை காரணமாக கெலவரப்பள்ளி நீர்தேக்க அணைக்கு தற்போது நீர்வரத்து அதிகரித்துள்ளது.

கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
நேற்று, அணைக்கு வினாடிக்கு 560 கனஅடி நீர் வரத்து இருந்த நிலையில் 560 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. இன்று, கெலவரப்பள்ளி நீர்தேக்க அணையின் மொத்த கொள்ளளவான 44.28 அடிகளில் 40.34 அடி நீர் இருப்பு வைக்கப்பட்டு வினாடிக்கு 720 கனஅடி நீர்வரத்தாக உள்ள நிலையில் அணையின் பாதுகாப்பு கருதி அப்படியே தென்பெண்ணை ஆற்றில் 720 கனஅடி நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.

ABOUT THE AUTHOR

...view details