தமிழ்நாடு அரசு சார்பில் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநில எல்லைகளில் மார்ச் 31ஆம் தேதி வரை போக்குவரத்திற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் தமிழ்நாட்டைச் சேர்ந்த பேருந்துகள் கர்நாடக - தமிழ்நாடு எல்லையான ஓசூரை அடுத்த ஜூஜூவாடி வரை மட்டுமே இயக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலப் பேருந்துகள் தமிழ்நாட்டிற்குள் நுழைய முழுமையாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சிறைப்பிடிக்கப்பட்ட மூன்று கர்நாடாக பேருந்துகள் இதனிடையே தமிழ்நாடு அரசின் தடையை மீறி பெங்களூருவிலிருந்து ஓசூருக்கு இயக்கப்பட்ட கர்நாடக மாநில பதிவு எண்களைக் கொண்ட மூன்று தனியார் பேருந்துகளை ஓசூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் சிறைப்பிடித்துள்ளனர். மேலும் வாகனங்களின் சான்றிதழ்கள், உரிமம் உள்ளிட்டவற்றை ஆய்வுசெய்து வருகின்றனர்.
இதையும் படிங்க:வெறிச்சோடிய குமரி: கழுகுப் பார்வை காட்சிகள்!