தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 8, 2021, 10:30 PM IST

ETV Bharat / state

ரெம்டெசிவிர் கடத்தல்: ஐடி நிறுவன மேலாளர் கைது!

ரெம்டெசிவிர் மருந்தை காரில் கடத்திய ஐடி நிறுவன மேலாளர் ஓசூரில் கைது செய்யப்பட்டார்.

Remdesivir smuggling
ரெம்டெசிவிர் கடத்தல்

பெங்களூருவிலிருந்து ரெம்டெசிவிர்மருந்தை காரில் கடத்தி வந்து தமிழ்நாட்டில் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக, ஓசூர் குடிமைப்பொருள் வழங்கல் குற்றபுலனாய்வு காவலர்களுக்கு தகவல் கிடைத்தது.

இந்தநிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி மூக்கண்டப்பள்ளி என்னுமிடத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, அங்கு வந்த காரில் 9 ரெம்டெசிவிர் மருந்துகள் கைப்பற்றப்பட்டன.

அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர், பெங்களூர் ஏளனஹள்ளி பகுதியில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் மேலாளராகப் பணியாற்றி வரும் ஆனந்த் பாலாஜி(37) என்று தெரியவந்துள்ளது.

மேலும் வங்க தேசத்திலிருந்து வந்த ரெம்டெசிவிர் மருந்தை ஒரு பாட்டில் 10,000 ரூபாய் என, 9 பாட்டில்களை வாங்கி, அதனை 16,000 ரூபாய்க்கு கூடுதலாக விற்க தமிழ்நாடு எடுத்து வந்ததாக தெரியவந்தது.

பின்னர் அந்த 9 ரெம்டெசிவிர் மருந்துகளை கைப்பற்றி, ஆனந்த் பாலாஜியை ஓசூர் சிப்காட் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.

இதையும் படிங்க: மும்பை திரும்பும் குடிபெயர்ந்த தொழிலாளர்கள்

ABOUT THE AUTHOR

...view details