இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க இயக்கக் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் இராம கவுண்டர் கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியதாவது, 'கடந்த 60 ஆண்டுகளாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இரு போகம் சாகுபடி செய்து வந்தோம். தற்போது ஒருபோக சாகுபடிக்குக் கூட வழியில்லை. அந்த அளவுக்கு தண்ணீர் வறண்டு போய்விட்டது.
கேஆர்பி அணையின் பழுதடைந்த மதகுகளைச் சீர் செய்யுமாறு கோரிக்கை...!
கிருஷ்ணகிரி:கேஆர்பி அணையின் பழுதடைந்த மதகுகளை விரைவில் சீர் செய்து தருமாறு தமிழ்நாடு விவசாயிகள் சங்க இயக்கக் கூட்டமைப்பினர் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கேஆர்பி அணையில் ஆறு மதகுகள் சரிவர பராமரிக்கப்படவில்லை. எனவே இரண்டாம் போக சாகுபடி முடியும் முன்பு அதனைச் சரி செய்யுமாறு ஏற்கனவே கோரிக்கை விடுத்தோம். ஆனால் இதுவரையில் செய்யாமல் இருப்பது வருத்தத்தை அளிக்கிறது. இதனால் தண்ணீர் வீணாகிறது. அரசு கால்வாய் அமைத்துத் தருவதாகக் குறிப்பிட்டது. ஆனால், கால்வாய் பணி தொடங்க இன்னும் தாமதம் ஆகிறது.
எனவே பழுதடைந்த மதகுகளையும், கிடப்பில் போடப்பட்ட கால்வாய் பணிகளையும் மாவட்ட நிர்வாகமும், தமிழ்நாடு அரசும் விரைந்து சீர் செய்ய வேண்டும். இன்னும் 15 நாட்களுக்குள் தொடர்புடைய பராமரிப்பு பணிகள் நடைபெறாவிட்டால் தமிழ்நாடு விவசாயிகள் சங்க இயக்க கூட்டமைப்பு சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடைபெறும்' என தெரிவித்தார்.