தமிழ்நாடு முதலமைச்சரின் சிறப்புத் திட்டமான குடிமராமத்து திட்டத்தின் கீழ் கிருஷ்ணகிரி மாவட்ட கல்லுக்குருக்கி ஊராட்சியில் ரூ.11 லட்சத்து 45 ஆயிரம் மதிப்பில் முனியப்பன் குட்டை தூர்வாரி கரைகளைப் பலப்படுத்தும் பணி, நீர்வரத்து கால்வாய், நீர் வெளியேற்று கால்வாய், மதகுகள் சரிசெய்யும் பணிகளை மாவட்ட ஆட்சியர் சு.பிரபாகர் இன்று (ஜூன் 22) ஆய்வு செய்தார்.
குடிமராமத்து பணிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்
கிருஷ்ணகிரி: கல்லுக்குருக்கி ஊராட்சி முனியப்பன் குட்டையில் ரூ.11 லட்சத்து 45 ஆயிரம் மதிப்பில் நடைபெறும் குடிமராமத்து பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார்.
இதனைத்தொடர்ந்து, பீ.ஜி.புதூர் கிராம நிர்வாக அலுவலகம், மேல் பட்டி நியாயவிலைக்கடை, பெத்துமேலுப்பள்ளி நியாயவிலைக் கடைகளை ஆய்வு செய்து கரோனா பாதிப்பு காரணமாகத் தமிழ்நாடு அரசு அறிவித்த ஜூன் மாதத்திற்கு குடும்ப அட்டைதாரர்களுக்குத் தரமான அரிசி வழங்கப்படுகிறதா என பொதுமக்களிடம் கேட்டறிந்தார்.
மேலும், பீ.ஜி.புதூரில் ஐந்து ஏக்கரில் ஒரு வருடத்திற்கு 62,000 நெட்டை, குட்டை ரகம், 38,000 நெட்டை ரக தென்னங்கன்று உற்பத்தி செய்யும் மையத்தைப் பார்வையிட்டு உற்பத்தி செய்வது குறித்தும், விவசாயிகளுக்கு வழங்கும் விதம் குறித்தும் தற்போது தயார் நிலையில் இருக்கும் கன்றுகளையும் பார்வையிட்டு வேளாண்மை அலுவலர்களுடன் ஆய்வு செய்தார்.