கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் பகுதியில் இளைஞர் ஒருவர் திடீரென வீச்சரிவாள் மற்றும் கோடாரியுடன் திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் ரகளையில் ஈடுபட்டார். அவர் நடுரோட்டில் வீச்சரிவாள் வைத்துக்கொண்டு சசிகலாவை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று கூச்சலிட்டு அரிவாளை காட்டி, பாதசாரிகள், வாகன ஓட்டிகளை மிரட்டினார். இதனால் திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 20 நிமிடங்கள் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது
சசிகலாவை விடுதலை செய்யக்கோரி நடுரோட்டில் வீச்சரிவாளுடன் இளைஞர் ரகளை - youth public nuisance in road
கரூர்: சசிகலாவை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்று கூறி இளைஞர் ஒருவர் வீச்சரிவாளுடன் நடுரோட்டில் ரகளை செய்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவிவருகிறது.
நடுரோட்டில் வீச்சரிவாளுடன் இளைஞர் ரகளை
சாலையில் வீச்சரிவாளுடன் இளைஞரை கண்ட பொதுமக்கள் அச்சத்தில் அங்கும் இங்கும் ஓடி ஒளிந்தனர். பின்னர் சற்றுநேரத்தில் அந்த இளைஞரின் சகோதரர் அங்கு வந்து அவரை அடித்து இழுத்துச் சென்றார். இளைஞர் இவ்வாறு ரகளை செய்தபோது அப்பகுதியில் இருந்த காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
Last Updated : Dec 9, 2019, 3:01 PM IST