தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 5, 2021, 6:29 PM IST

ETV Bharat / state

கரூர் மாவட்டத்தில் தூர்வாரப்படும் வாய்கால்கள் ஆய்வு

கரூர்: கரூர் மாவட்டத்தில் காவிரி ஆற்றுப் பாதுகாப்பு கோட்டத்தில் உள்ள எட்டு வடிகால், புகலூர், நெரூர் வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டு வருவதை கரூர் மாவட்ட சிறப்பு கண்காணிப்பு அலுவலர் சி. விஜயராஜ் குமார் ஐஏஎஸ் இன்று (ஜூன் 5) நேரில் ஆய்வு செய்தார்.

கரூர் மாவட்டத்தில் தூர்வாரப்படும் வாய்கால்கள் ஆய்வு
கரூர் மாவட்டத்தில் தூர்வாரப்படும் வாய்கால்கள் ஆய்வு

புகலூர் வாய்க்கால் பகுதியான நொய்யல், முத்தனூர், நஞ்சை புகளூர் ஆகிய பகுதிகளை அவர் பார்வையிட்ட பிறகு நெரூர் வாய்க்கால் செவ்வந்திபாளையம், முனியப்பனூர், கள்ளப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளிலுள்ள வடிகால்களையும், அங்கு தூர்வாரும் பணிகளையும் பார்வையிட்டார்.
இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக வரும் ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறந்து விட தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். தண்ணீர் கடைமடை வரை செல்வதற்கு கரூர் மாவட்டத்தில் உள்ள காவிரி ஆற்று பாதுகாப்பு கோட்டத்தில் உள்ள நீர் வழித்தடங்களை தூர்வார அரசு அனுமதி அளித்துள்ளது.

கரூர் மாவட்டத்தில் தூர்வாரப்படும் வாய்கால்கள் ஆய்வு
இன்று நடைபெற்றுவரும் புகலூர், நெரூர் பாசன வாய்க்கால் சுமார் 25 கிலோமீட்டர் நீளத்துக்கு தூர்வாரப்பட்டு வருகிறது. இதன் மூலம் நன்னியூர், வாங்கல், நெரூர், ஆகிய ஐந்து கிராமங்களைச் சேர்ந்த சுமார் 9, 704 ஏக்கர் பாசன நிலங்கள் பாசன வசதி பெற்று பயனடைவார்கள்.
தூர்வாரும் பணிகள் தற்பொழுது 30 விழுக்காடு நிறைவடைந்த நிலையில் இன்னும் ஒரு வார காலத்திற்குள் அனைத்து முடிக்கப்பட்டு தண்ணீர் திறந்துவிட அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது" எனத் தெரிவித்தார்.

புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழ்நாடு அரசு, விவசாயிகளின் நலனில் அக்கறையோடு செயல்படுவது விவசாயிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.

இதையும் படிங்க:’கரோனா தடுப்பூசி கையிருப்பு இல்லை’: பொதுமக்கள் திருப்பி அனுப்பி வைப்பு

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details