தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கல்குவாரிக்கு குளிக்கச் சென்ற பள்ளி சிறுமிகள் உயிரிழப்பு!

கரூர்: கல்குவாரிக்கு குளிக்கச் சென்ற இரு பள்ளிச் சிறுமிகள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

கல்குவாரிக்குள் மூழ்கி பள்ளி சிறுமிகள் இருவர் உயிரிழப்பு!
கல்குவாரிக்குள் மூழ்கி பள்ளி சிறுமிகள் இருவர் உயிரிழப்பு!

By

Published : Jul 14, 2020, 3:22 PM IST

கரூர் மாவட்டம் வெள்ளியணை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பொரணி கிராமத்தைச் சேர்ந்த கருப்பசாமியின் மகள் ஸ்ருதி(13), சீனிவாசனின் மகள் காவ்யா (10) தனது தோழிகளுடன் ஊரில் உள்ள கல்குவாரியின் நீர்நிலையில் இன்று (ஜூலை 14) குளிக்க சென்றுள்ளனர்.

அப்போது நான்கு பேரும் இறங்கி ஆழமான பகுதிக்கு சென்றுள்ளனர். நீச்சல் தெரியாத அவர்கள் தத்தளித்து கூச்சலிட்டதைக் கேட்டு அந்தப் பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த சிலர் ஓடிச் சென்று இரண்டு சிறுமிகளை காப்பாற்றியுள்ளனர். அதற்குள் ஸ்ருதி, காவ்யா ஆகியோர் நீரில் மூழ்கியுள்ளனர். உடனடியாக, ஊருக்குள் இருந்தவர்கள் வந்து நீரில் மூழ்கி, அரை மணி நேரம் மேலாக தேடி இரு சிறுமிகளையும் மீட்டனர்.

இதனையடுத்து ஸ்ருதி, காவ்யாவை கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்துவிட்டு, சிறுமிகள் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வெள்ளியணை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க...ராணுவ வீரரின் மனைவி, தாய் கொலை; நகைகள் கொள்ளை!

ABOUT THE AUTHOR

...view details