கரூர் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியை ஆதரித்து பள்ளப்பட்டியில் இன்று நடைபெற உள்ள பரப்புரை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநில சிறுபான்மை பிரிவு தலைவர் அஸ்லம் பாஷா கரூர் வந்துள்ளார். பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது,
டிடிவி தினகரனுடன் தம்பிதுரை ரகசிய கூட்டணி வைத்து நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்கிறார். மேலும் நரேந்திர மோடி கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தேர்தலில் போட்டியிடும்போது வெற்றி பெற்று மக்களுக்கு சேவை செய்வேன் என்று கூறியிருந்தார். ஆனால் வங்கியில் ஊழல் செய்த நீரவ் மோடி, லலித் மோடி, மல்லையா போன்ற தொழிலதிபர்கள் வெளிநாடு தப்பிச் செல்வதற்கு மட்டுமே அவர் சேவை செய்துள்ளார்.
இதனை டெல்லியில் இருந்து கவனித்த மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, தான் கொள்ளையடித்த பணத்தை பாதுகாக்க மோடி தான் சிறந்த நபர் என்று கருதி அவரோடு கூட்டணி அமைத்து நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கிறார். அதுமட்டுமல்லாது தம்பிதுரை ஒரு ஏஜென்டாகவும் செயல்படுகிறார்.
தமிழ்நாடு காங்கிரஸ் மாநில சிறுபான்மை பிரிவு தலைவர் அஸ்லம் பாஷா கரூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் தம்பித்துரை சொந்த கட்சிக்கு துரோகம் செய்ய நினைக்கிறார். கரூர் வாக்காளர்களின் எளிமை, நேர்மை, தூய்மை ஆகியவற்றை கடைபிடிக்கும் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி வேண்டுமா அல்லது சொந்த கட்சிக்கு துரோகம் செய்யும் தம்பிதுரை வேண்டுமா என முடிவு செய்யும் நேரம் வந்துவிட்டது. அதிகாரம்,பணம் ஆகியவற்றை கொண்டு மக்களை மண்டியிடச் செய்ய முடியாது. நாடு முழுவதும் ராகுல் அலை வீசுகிறது என அவர் தெரிவித்தார்.