தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மக்களோடு மக்களாக உணவருந்திய மாவட்ட ஆட்சியர் ! - independence day celebration

கரூர்: கல்யாண வெங்கடரமண கோயிலில் நடைபெற்ற பொது விருந்தில் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் பொதுமக்களுடன் அமர்ந்து உணவருந்தினார்.

மக்களோடு மக்களாக உணவருந்திய மாவட்ட ஆட்சியர் !

By

Published : Aug 15, 2019, 6:31 PM IST


73ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு கரூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றினார். இவ்விழாவில் காவல்துறை, ஊர்க்காவல் படை, நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் ஆகியோரின் அணிவகுப்பு, சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுகளை கெளரவித்தல், பல்வேறு துறைகளின் கீழ் 165பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 38லடசத்து 65ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்குதல், போன்ற நிகழ்ச்சிகள் நடந்தது.

மக்களோடு மக்களாக உணவருந்திய மாவட்ட ஆட்சியர் !

இதை தொடர்ந்து மாலையில் தான்தோன்றி மலையில் உள்ள கல்யாண வெங்கட்ரமண திருக்கோயிலில் நடைபெற்ற பொது விருந்தில் பொதுமக்களோடு அமர்ந்து உணவருந்தினார்.

.

ABOUT THE AUTHOR

...view details