தமிழ்நாடு

tamil nadu

நடுவழியில் கழன்று ஓடிய பேருந்தின் டயர் - சாமர்த்தியமாகச் செயல்பட்ட ஓட்டுநர்!

By

Published : Jan 21, 2020, 8:14 AM IST

கரூர்: நடுவழியில் ஆம்னி பேருந்தின் டயர் கழன்று ஓடிய நிலையில், ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

car accident
car accident

கரூர் மாவட்டம் பண்டுதகாரன்புதூர் பகுதியில் சேலம் நோக்கிச் சென்ற ஆம்னி பேருந்தின் முன் பக்க சக்கரம் கரகாட்டக்காரன் திரைப்பட பாணியில் கழன்று ஓடியது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பேருந்து ஓட்டுநர் உடனடியாக சாமர்த்தியமாகச் செயல்பட்டு, பேருந்தை நிறுத்தினார். ஓட்டுநரின் இந்த சாமர்த்தியத்தால் பேருந்தில் பயணித்த 20க்கும் மேற்பட்டோர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் ஓடிய டயர், அப்பகுதியில் உள்ள நியாய விலை கடையில் மோதி சுற்றுச்சுவர் இடிந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நெடுஞ்சாலை காவல் துறையினர், இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து, பயணிகள் அனைவரும் மாற்று பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

டயர் கழன்று ஓடிய பேருந்தை பார்வையிட்ட காவல் துறையினர்

மேலும், நியாய விலைக்கடைக்கு விடுமுறை என்பதால் பெரும் விபத்து ஏதும் நிகழவில்லை.

இதையும் படிங்க: தொலைதொடர்புத் துறையை மீட்டெடுக்கும் வழி

ABOUT THE AUTHOR

...view details