தமிழ்நாட்டில் வருகின்ற 27, 30 ஆகிய இரு நாள்களில் உள்ளாட்சி மன்றத் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் ஆணையிட்டது. அதனடிப்படையில், உள்ளாட்சி மன்றத் தேர்தல் குறித்த பணிகள், வாக்கு சேகரிக்கும் பணிகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கரூர் மாவட்டத்தில் எட்டு ஊராட்சி ஒன்றியங்களுக்கு தேர்தல் நடத்தப்படுகிறது. அதில், 27ஆம் தேதி கரூர், தான்தோன்றி, அரவக்குறிச்சி, க. பரமத்தி போன்ற ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெறுகிறது. 30ஆம் தேதி கிருஷ்ணராயபுரம், குளித்தலை, கடவூர், தோகமலை ஊராட்சி ஒன்றியங்களுக்கு தேர்தல் நடத்தப்படுகின்றது.
இந்நிலையில், தான்தோன்றி ஊராட்சிக்கு உட்பட்ட மணவாடி அய்யம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கே.பி. கந்தசாமி என்பவர் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு செயேட்சையாக வேட்பு மனுத்தாக்கல் செய்திருந்தார். ஆனால் வேட்புமனு பரிசீலனை பின்பு வேட்பாளர்கள் நீக்கப்பட்டு போட்டியின்றி அப்பகுதியில் பஞ்சாயத்து தலைவராக அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.