தமிழ்நாடு

tamil nadu

சிறுவனுக்கு பாலியல் தொல்லை - 30 ஆண்டுகள் சிறை தண்டனை!

By

Published : Mar 30, 2022, 12:56 PM IST

Updated : Mar 30, 2022, 1:03 PM IST

பள்ளி சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததற்காக போக்சோ வழக்கில் கைதான நபருக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கரூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

போக்சோ வழக்கில் கைதான நபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை!
போக்சோ வழக்கில் கைதான நபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை!

கரூர்: ஆண்டான்கோயில் கிழக்கு ஊராட்சி சரஸ்வதி நகரில் 2021ஆம் ஆண்டு செப்டம்பர் 19ஆம் தேதி 7 வயது பள்ளி சிறுவனை தனி அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த சண்முகவேல் என்ற சலவைத் தொழிலாளியை கரூர் நகர போலீசார் கைது செய்தனர்.

இது தொடர்பாக கரூர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கில் நீதிபதி நசீமா பானு நேற்று(மார்ச்29) தீர்ப்பளித்தார். குற்றவாளியான சண்முகவேலுக்கு, சிறுவனை ஏமாற்றி கடத்திச் சென்றதற்காக 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1000 அபராதமும், போக்சோ சட்டத்தின்கீழ் 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் என மொத்தம் 30 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கி தீர்ப்பளித்தார்.

மேலும், பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு அரசு சார்பில் ரூ.3.5 லட்சம் தமிழ்நாடு அரசு வழங்கப்படும் என உத்தரவிட்டார். போக்சோ வழக்கில் ஆறு மாதத்திற்குள் குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர பணியாற்றிய கரூர் நகர காவல் துறைக்கு கரூர் காவல் கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: 'விழுப்புரம் மாவட்ட த.மு.மு.க தலைவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி போராட்டம்'

Last Updated : Mar 30, 2022, 1:03 PM IST

ABOUT THE AUTHOR

...view details