தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வாக்காளர்களின் கவனத்துக்கு...! - இது கரூர் மாவட்ட தேர்தல் அலுவலரின் அறிவுறுத்தல்

கரூர்: உள்ளாட்சித் தேர்தலையெட்டி புகைப்பட வாக்காளர் பட்டியலை வெளியிட்ட மாவட்ட தேர்தல் அலுவலர் அன்பழகன், வாக்காளர்கள் தங்கள் பெயர் விவரங்களில் மாற்றம் இருந்தால் வாக்காளர் பதிவு அலுவலகத்திற்கு சென்று மாற்றிக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான அன்பழகன் பேட்டி

By

Published : Oct 5, 2019, 8:21 AM IST

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் அன்பழகன் உள்ளாட்சித் தேர்தலையெட்டி புகைப்பட வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறும்போது, "மாவட்ட நகராட்சி, ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் வாக்காளர்களுடைய புகைப்பட பட்டியல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படவுள்ளது.

கரூர் மாவட்டத்தில் உள்ள இரண்டு நகராட்சிகள், 11 பேரூராட்சிகள், எட்டு ஊராட்சி ஒன்றியங்களில் ஆண் வாக்காளர்கள் நான்கு லட்சத்து 18 ஆயிரத்து 352 பேரும் பெண் வாக்காளர்கள் நான்கு லட்சத்து 43 ஆயிரத்து 612 பேரும் இதர வாக்காளர்கள் 57 என மொத்தம் எட்டு லட்சத்து 62 ஆயிரத்து 21 வாக்காளர்கள் உள்ளனர்" என்று கூறினார்.

கரூர் மாவட்ட தேர்தல் அலுவலர் அன்பழகன் பேட்டி

உள்ளாட்சித் தேர்தல் வேட்புமனு தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாக வாக்காளர்கள் தங்கள் பெயர் விவரங்களில் மாற்றம் இருந்தால் வாக்காளர் பதிவு அலுவலகத்திற்கு சென்று மாற்றிக்கொள்ள வேண்டும் எனவும் மாவட்ட தேர்தல் அலுவலர் அன்பழகன் அறிவுறுத்தினார்.

இதையும் படிங்க: பேனருக்கு தடை விதிக்கக் கூடாது - தனியரசு எம்எல்ஏ

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details