தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

போட்டியிடுபவர்கள் முக்கியமில்லை; சின்னம்தான் முக்கியம் -தம்பிதுரை

கரூர்: யார் போட்டியிடுகிறார்கள் என்பது முக்கியமில்லை; சின்னம்தான் முக்கியம் என கரூர் நாடாளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் தம்பிதுரை வாக்கு சேகரிப்பின்போது தெரிவித்தார்.

ADMK

By

Published : Apr 2, 2019, 3:16 PM IST

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல், 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு, அனைத்துக் கட்சியினரும் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர்.

கரூர் நாடாளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் தம்பிதுரை, அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட ஈசநத்தம் வெஞ்சமாங்கூடலூர் ஊராட்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். இவருடன் தமிழ்நாடு போக்குவரத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இணைந்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

தம்பிதுரை வாக்கு சேகரிப்பு
அப்போது திறந்தவெளி வாகனத்தில் வாக்கு சேகரித்து தம்பிதுரை பேசியதாவது:
  • இரட்டை இலை சின்னம் என்பது உங்கள் அபிமான சின்னம். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சின்னம். இங்கு யார் போட்டியிடுகிறார்கள் என்பது முக்கியமில்லை சின்னம்தான் முக்கியம்.
  • ஒரு குடும்பத்தில் தாயும், தந்தையும் சேர்ந்து, சேர்த்துவைக்கும் சொத்தை எப்படி மகன் காப்பாற்றுகிறான். அதுபோல இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து நீங்கள் ஆட்சியும் சின்னத்தையும் காப்பாற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


ABOUT THE AUTHOR

...view details