கரூர் மாவட்டம் ஜெகதாபியை அடுத்து உள்ளது பொரணி கிராமம். இந்தக் கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இப்பள்ளியின் தலைமை ஆசிரியராகப் பணியாற்றிவரும் சுஜாதா ஷியாமளா என்பவர் பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகளை மரியாதை குறைவாக நடத்துவதாகவும், பள்ளிக்கு 100 சதவீதம் தேர்ச்சி விகிதம் வேண்டும் என்பதற்காக சரியாக பள்ளிக்கு வராத மாணவர்களையும், கைடுகள் வாங்காதவர்களையும் முட்டி போட வைப்பது போன்ற தண்டனைகள் வழங்கப்பட்டதாகவும், அதனால் 15க்கும் மேற்பட்ட மாணவர்கள் பள்ளிக்குச் செல்லாமல் வேலைக்குச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டும் பெற்றோர், கடந்த 15 தினங்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர் நாள் கூட்டத்தில் புகார் மனு அளித்தனர்.