கரூர் மாவட்டத்தில் 1866ஆம் ஆண்டு நாச்சிமுத்து என்பவர் பிறந்து 1884ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவிற்கு பணி நிமித்தமாகச் சென்று விட்டார். அங்கு அவருக்குத் திருமணமாகி மனைவி, குழந்தைகள் இருந்த நிலையில், 1951ஆம் ஆண்டு தனது 85ஆவது வயதில் காலமானார்.
இதையடுத்து, இவரின் கொள்ளுப் பேத்தி வெண்டி, அவரது கணவர் டெஸ்மாண்ட் ஆகியோர் தாத்தாவின் உறவினர்களைத் தேடி 140 ஆண்டுக்குப் பிறகு தற்போது கரூர் வந்துள்ளனர். வெண்டி தமிழ் மீது கொண்ட ஈர்ப்பாலும், பூர்வீகம் தமிழ் என்பதாலும் இரண்டு நாள்கள் இன்பச் சுற்றுலாவாக தமிழ்நாடு வந்திருந்தனர்.