தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 19, 2022, 3:03 PM IST

Updated : Mar 19, 2022, 3:48 PM IST

ETV Bharat / state

கனிமவள கடத்தலை தடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியில் இருந்து கிராவல் மண் அனுமதி என்ற பெயரில் கரூரில் உள்ள செங்கல் சூளைக்கு களிமண் கடத்தல் நடைபெறுவதாக குற்றஞ்சாட்டு எழுந்துள்ளது.

கிராவல் மண் பர்மிட் பெற்று களிமண் கரூருக்கு கடத்தல்
கிராவல் மண் பர்மிட் பெற்று களிமண் கரூருக்கு கடத்தல்

கரூர் திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் தினந்தோறும் 15க்கும் மேற்பட்ட லாரிகளில் திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து கிராவல்மண், ஈரோடு மாவட்டத்திற்கு எடுத்துசெல்வதாக அனுமதி பெற்று (Permit) கரூர் மாவட்டத்திலுள்ள புன்னம்சத்திரம் அருகே உள்ள செந்தில்சேம்பர்எனும் செங்கல் தயாரிக்கும் நிறுவனத்துக்கு சட்டவிரோதமாக எடுத்துச் செல்லப்படுகிறது.

இந்த சட்ட விரோத செயல் குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கரூர் மாநகர செயலாளர் பாலமுரளி என்கிற பாலசிங்கம் ஈடிவிபாரத்திற்கு அளித்த பேட்டியில், “இந்த கனிம வளங்கள் குறித்து புகார் தெரிவித்தால் அலுவலர்கள் நடவடிக்கை எடுக்காமல் இருந்தால், சட்டவிரோதமாக கனிமவளங்களை கடத்துவதற்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சம்பந்தப்பட்ட லாரிகளை மறித்து போராட்டத்தில் ஈடுபடுவோம்.

இதை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும்” எனத் தெரிவித்தார். இந்த விவகாரத்தில் திண்டுக்கல், கரூர் மாவட்ட ஆட்சியர்களும், மாவட்ட கனிமவளத்துறை அலுவலர்களும் இயற்கை வளமான கனிமவளங்களை காக்கதுரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது.

கனிமவள கடத்தலை தடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

இதையும் படிங்க:விதை முதல் விளைச்சல் வரை... மின்னணு வேளாண்மைத் திட்டம்..!

Last Updated : Mar 19, 2022, 3:48 PM IST

ABOUT THE AUTHOR

...view details