தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'மாவட்ட ஆட்சியரை மாற்றும் வரை போராட்டம் தொடரும்' மார்க்சிஸ்ட் அறிவிப்பு!

கரூர்: மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வரும் மாவட்ட ஆட்சியரை மாற்றும் வரை போராட்டம் தொடரும் என, இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

மாவட்ட ஆட்சியர்

By

Published : Aug 13, 2020, 5:04 PM IST

Updated : Aug 13, 2020, 5:10 PM IST

கரூர் மாவட்டத்தில், கடன் தொல்லையில் இருந்து விடுதலை என்ற நோக்கத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) அகில இந்திய முற்போக்குப் பெண்கள் கழகம், அகில இந்திய தொழிற்சங்கம் சார்பில், மாவட்டத்தில் நடைபெற்று வரும் கந்து வட்டிக்கு எதிராக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க ஆட்சியர் அலுவலகம் வந்தனர்.

கரோனா வைரஸ் பரவல் காரணமாக, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் மனுவை அளித்தனர். இந்த மனுவை அளிப்பதற்காக நூற்றுக்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர். இதுதொடர்பாக, மார்க்சிஸ்ட், லெனினிஸ்ட் கட்சி மாவட்ட குழு உறுப்பினர் முருகேசன் கூறுகையில்," கரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட குடும்பத்தில் மட்டுமல்லாது தொடர்புடைய குடும்பத்தையும், 30 நாட்களுக்கும் மேலாக மாவட்ட ஆட்சியர் வீட்டில் அடைத்து வைக்க உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக கேள்வி எழுப்பியதற்கு அவர்களை கைது செய்யவும் உத்தரவிட்டார். இதுபோல மாவட்ட ஆட்சியர், மத்திய அமைச்சர், கவர்னர் போன்றவர்களின் குடும்பத்தினர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிப்புக்குள்ளானால் அவர்களை அடைத்து வைப்பாரா, எனவே மனித உரிமை மீறல்களில் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் ஈடுபட்டு வருவதாகவும், அவரை கரூர் மாவட்டத்தில் இருந்து மாற்றும் வரை போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். கந்து வட்டிக்கு எதிராக, தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

Last Updated : Aug 13, 2020, 5:10 PM IST

ABOUT THE AUTHOR

...view details