கரூர் மாவட்டம் வேலப்பாடி பஞ்சாயத்தைச் சேர்ந்த பொன்னாபுரம் பகுதியில் வசித்து வருபவர் பெரியசாமி. திருச்சியில் எண்டர்பிரைசஸ் நிறுவனம் நடத்திவரும் பெரியசாமிக்கு பிரியா என்ற மனைவி இருந்தார்.
இந்நிலையில், இன்று காலை 9 மணியளவில் அவரது வீட்டில் பிரியாவின் உடல் எரிந்த நிலையில்இருப்பதைக் கண்டு அப்பகுதி மக்கள் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த அரவக்குறிச்சி காவல் துறையினர், உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர்.