தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 29, 2020, 10:13 AM IST

ETV Bharat / state

கரூரில் கரோனா வைரசை முறியடிக்க விநோத வழிபாடு

கரூர்: கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள மக்கள் பல்வேறுவிதமான விநோத வழிபாடுகளில் ஈடுபட்டுவருகின்றனர்.

PEOPLE PRAY FOR CORONA PREVENTION IN KARUR
PEOPLE PRAY FOR CORONA PREVENTION IN KARUR

உலகளவில் அச்சுறுத்தலை ஏற்படுத்திவரும் கரோனா வைரஸ் தற்பொழுது இந்தியாவில் தன்னுடைய கால்தடத்தைப் பதித்துவருகிறது. நாட்டில் இதுவரை கரோனா வைரசால் 24 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், கரூர் மாவட்டத்தைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் கரோனா வைரஸ் தொற்றிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்வதற்காக அப்பகுதியினர் பல்வேறு விநோத வழிபாடுகளை நடத்திவருகின்றனர்.

கரூரில் உள்ள பல்வேறு கிராமங்களில் இரவு நேரத்தில் வீட்டிற்கு வெளியே கும்பம் வைத்து அதில் வேப்பிலை, மஞ்சள் நீர் ஊற்றியும், கும்பத்தின் முன் விளக்கு ஏற்றி வைத்தும் வழிபாடு நடத்திவருகின்றனர்.

கரோனா வைரசை முறியடிக்க விநோத வழிபாட்டில் ஈடுபடும் மக்கள்

மேலும், வீட்டிற்கு வெளியே வேப்பிலை கட்டியும், வீடு முழுவதும் மஞ்சள் நீரால் தினமும் சுத்தம்செய்தும்-வருகின்றனர். இதன்மூலம் கரோனா வைரஸ் நோயிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம் என்றும் அவர்கள் நம்பிக்கைத் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க:கரோனா தடுப்பு நடவடிக்கை: வீடுகளின் முன்பு மஞ்சள் நீரை தெளித்து வேப்பிலைக் கட்டிய பெண்கள்

ABOUT THE AUTHOR

...view details