சுற்றுச்சூழலியல் போராளியும், காவிரி பாதுகாப்பு குழுவின் ஒருகிணைப்பாளருமான முகிலனை விசாரணைக்காக நீதிபதிகள் ஆஜர்படுத்தினர். அப்போது விசாரணைக் கைதியாக இருக்கும் தம்மை காவல்துறை உயர் அலுவலர்களின் தூண்டுதலின் பேரில் சிறைத்துறை அலுவலர்கள் தாக்கியதாக நீதிபதியிடம் தனது சட்டையை கழட்டிக் காட்டி முறையிட்டார்.
எழுத்துப்பூர்வமாக கோரிக்கைகளை அளிக்க முகிலனுக்கு உத்தரவு!
கரூர்: முகிலன் கூறிய முறையீடுகளை எழுத்துப்பூர்வமாக அளிக்கக்கோரி நீதிபதிகள் உத்தரவிட்டதால், அவரது புகார் மனுவை நீதிமன்றத்தில் அளித்த பிறகே வழக்கின் உத்தரவு தெரியவரும்.
மேலும் நீட் தேர்வு, மாட்டுக்கறி சாப்பிட்டவர்கள் மீது போடப்பட்ட வழக்கு, சேலம் - சென்னை எட்டு வழி சாலை, ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பாக நடத்திய துப்பாக்கிச்சூடு போன்ற சம்பவங்களையும் மேற்கோள்காட்டி, அவற்றுக்கு எதிரான கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நேற்று முதல் சிறையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
அவரது பதில்களை கேட்ட நீதிபதி, நீங்கள் கூறும் முறையீடுகளை எழுத்துப்பூர்வமாக அளியுங்கள், அப்போதுதான் விசாரிக்க முடியும் என்றனர். இதைத் தொடர்ந்து அவர் தனது கோரிக்கைகளை மனுவாக எழுதி ஒப்படைத்த பிறகுதான் வழக்கின் உத்தரவு தெரியவரும்.