கரூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு செந்தில் பாலாஜி பவுண்டேஷன் சார்பில் ரூபாய் 21 லட்சத்து 84 ஆயிரம் மதிப்புள்ள 20 ஆக்சிஜன் கான்சென்ட்ரேட்டர் கருவிகள் வழங்கப்பட்டன.
பின்னர் செய்தியாளர்களிடம் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாவது, "கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மொத்தம் 700 படுக்கைகள் உள்ளன. இவற்றில் தற்பொழுது 300 கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படுகிறது. 130 படுக்கைகள் ஆக்ஸிஜன் வசதி அல்லாத படுக்கைகள் ஆகும்.
தற்பொழுது நோயாளிகளின் தேவைகளுக்கு ஏற்ப கூடுதலாக 70 ஐசியூ படுக்கைகள் இன்று (மே.17) புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ளன. 370 படுக்கைகள் ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.