தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 12, 2020, 11:30 PM IST

ETV Bharat / state

கரூர் தாலுகா அலுவலகம் முன்பு டாஸ்மாக் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

கரூர் தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் சார்பில் டாஸ்மாக் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

karur-tasmac-employees-protest-on-demanding-their-needs
கரூர் தாலுகா அலுவலகம் முன்பு டாஸ்மாக் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

கரூர் தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் சார்பில் மாநில துணைத் தலைவர் ராமலிங்கம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

நடப்பு சட்டப்பேரவைக் கூட்டத் தொடரிலேயே, 17 ஆண்டுகளாக தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றிவரும் டாஸ்மாக் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.

குறைந்தபட்ச ஊதியமாக 21 ஆயிரம் ரூபாய் அளிக்க வேண்டும், அரசுத்துறை காலி பணியிடங்களில் பணியமர்த்த வேண்டும் மேலும் ஒரு மாவட்ட மேலாளர் இன்னொரு மாவட்டத்தில் சென்று ஆய்வு செய்வதை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

கரூர் தாலுகா அலுவலகம் முன்பு டாஸ்மாக் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

இதையும் படிங்க:15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்!

ABOUT THE AUTHOR

...view details