கரூர் மாவட்டம், குளித்தலை அருகே தோகைமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ராச்சாண்டர் திருமலையில் பொங்கல் திருநாளை முன்னிட்டு 58ஆம் ஆண்டு மாபெரும் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியினை மாவட்ட ஆட்சியர் அன்பழகன் தொடங்கி வைத்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் மற்றும் குளித்தலை சட்டமன்ற உறுப்பினர் ராமர் உள்ளிட்ட பலர் கொண்டனர்.
காலை 8 மணிக்குத் தொடங்கிய ஜல்லிக்கட்டுப் போட்டி மிகச்சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஜல்லிக்கட்டுப் போட்டியில் 850க்கும் மேற்பட்ட காளைகளும், 450க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர். தற்போது வரை 150க்கும் மேற்பட்ட மாடுகள் வாடிவாசலை விட்டு வெளியேறியுள்ளது. இதில், மூன்று மாடுபிடி வீரர்கள் காயமடைந்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.