கரூரில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "இந்தி மொழிக் கற்பதை வரவேற்க வேண்டும். அரசியல் பணி நிமித்தமாக டெல்லி சென்றால் மொழிபெயர்ப்பாளர்களையும் அழைத்துச் செல்ல வேண்டிய சூழலுள்ளது.
ஆதலால் இந்தி மொழியை கற்பதில் தவறில்லை. அதேசமயம், இந்தி திணிப்பு யாராலும் ஏற்கப்படாது. மத்திய, மாநில அரசுகள் கொண்டு வரும் திட்டங்களை திமுக தலைமையிலான தோழமைக் கட்சிகள் தொடர்ந்து எதிர்த்து வரும் மனப் போக்கை கைவிட வேண்டும்" எனக் கூறினார்.