தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரூர் சுயேச்சை வேட்பாளரின் நிறுவனத்தில் சோதனை

கரூர்: சுயேச்சை வேட்பாளரின் நிறுவனத்தில் வருமானவரித் துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டுவருகின்றனர்.

சுயேச்சை வேட்பாளர் நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை
சுயேச்சை வேட்பாளர் நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை

By

Published : Mar 29, 2021, 7:54 PM IST

காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளரும் கரூர் தொகுதி சுயேச்சை வேட்பாளருமான ராஜேஷ் கண்ணன் என்பவர் டெக்ஸ்டைல் நிறுவனம் நடத்திவருகிறார்.

இவருக்கு குப்பைத்தொட்டி சின்னம் ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது. தேர்தல் செலவின பார்வையாளர்கள் ஆளுங்கட்சியினரின் தேர்தல் முறைகேடுகள் குறித்து நடவடிக்கை எடுக்கவில்லை எனத் தொடர்ந்து இவர் குற்றஞ்சாட்டிவந்தார்.

இதனிடையே 10-க்கும் மேற்பட்ட வருமானவரித் துறையினர் இன்று (மார்ச் 29) காலை முதல் இவரது நிறுவனத்தில் சோதனை மேற்கொண்டுவருகின்றனர்.

சுயேச்சை வேட்பாளரின் நிறுவனத்தில் சோதனை

காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கத்திற்கு நன்கொடை எங்கிருந்து வருகிறது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டுவருவதாகத் தெரிகிறது.

காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் முகிலன் நாளை (மார்ச் 30) தாராபுரம் வரும் பிரதமர் மோடிக்கு எதிராகக் கறுப்புக்கொடி காட்டப்போவதாக அறிவிப்பு வெளியிட்டார்.

இந்நிலையில் ராஜேஷ் கண்ணன் நிறுவனத்தில் நடைபெற்றுவரும் வருமானவரித் துறை சோதனை மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: எதிர்க்கட்சியினரைக் குறிவைக்கும் வருமானவரித் துறை: திமுக எம்பி புகார்

ABOUT THE AUTHOR

...view details