கரூர்:கருங்கம்பாளையம் அருகேஆசியன் சாயப்பட்டறை நிறுவனம் இயங்கி வருகிறது. நேற்று (ஜன.4) மாலை சுமார் 6 மணி அளவில், நிறுவனத்தில் நிலக்கரி வைத்திருக்கும் இடம் திடீரென புகை மண்டலமாக காட்சியளித்தது.
இதனைக் கண்ட ஊழியர்கள் உடனடியாக இது குறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்புத்துறையினர், சுமார் 3 மணி நேரத்துக்கு மேலாக போராடி தீயை அணைத்தனர். இதனால் அப்பகுதி புகைமூட்டமாக காட்சியளித்தது.