தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா தொற்று நோயாளிகளிடம் நலம் விசாரித்த மாவட்ட ஆட்சியர்!

கரூர் மாவட்ட பழைய அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள சிறப்பு சித்த மருத்துவ சிகிச்சைப் பிரிவில் கரோனா தொற்றுப் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளிடம் மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று நலம் விசாரித்தார்.

நலம் விசாரித்த மாவட்ட ஆட்சியர்!
நலம் விசாரித்த மாவட்ட ஆட்சியர்!

By

Published : Oct 8, 2020, 7:14 PM IST

கரூர்: பேருத்து நிலையத்தில் அமைந்துள்ள சித்த மருத்துவ பொருட்கள் விற்பனை நிலையத்தை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.

கரூர் நகர பகுதியில் அமைந்துள்ள பழைய அரசு தலைமை மருத்துவமனையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சிகிச்சையளிக்க அமைக்கப்பட்டுள்ள சிறப்பு சித்த மருத்துவ சிகிச்சைப் பிரிவில் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது சிகிச்சையில் இருந்தவர்களிடம் ஏதேனும் வசதி குறைபாடு உள்ளதா?, வேறு என்னென்ன வசதிகள் உங்களுக்கு தேவைப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் நேரடியாக கேட்டறிந்தார்.

மாவட்ட ஆட்சியர் ஆய்வு

மேலும், உங்களுக்கு சிறப்பான வகையில் சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவர்களும், செவிலியர்களும், தூய்மைப் பணியாளர்களும் அர்ப்பணிப்பு உணர்வோடு 24 மணி நேரமும் பணியாற்றி வருகிறார்கள். உங்களின் நலனில் அக்கறை கொண்டு மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எனவே நீங்கள் அனைவரும் மனஉறுதியுடன் இருக்க வேண்டும். அனைவரும் விரைவில் பூரண குணம் பெற்று தங்களது வீடு திரும்ப எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து, மாவட்ட நிர்வாகத்தால் கரோனா தொற்று தடுப்புக்காக கரூர் பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள சித்த மருத்துவ பொருட்கள் அடங்கிய மலிவு விலை மருந்து பெட்டக விற்பனை நிலையத்தை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதையும் படிங்க: கரோனா பாதிப்பு எதிரொலி : பேளூரில் முழு ஊரடங்கு!

ABOUT THE AUTHOR

...view details