கரூர் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரியில் கரூர், நாமக்கல், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டத்தை சேர்ந்த கரோனாவால் பாதிக்கப்பட்டோர் கிச்சை பெற்றுவருகின்றனர்.
இதில் பலர் பூரண குணமடைந்து வீட்டிற்கு அனுப்பப்பட்டு வந்தாலும், வெளி மாநிலம் மற்றும் சென்னையில் இருந்து வருபவர்கள் மூலம் கரூரில் கரோனா வைரஸ் தாக்கமானது அதிகரித்து கொண்டே வருகிறது.
இந்நிலையில் தாந்தோணி மலை பகுதியை சேர்ந்த 36 வயதுடைய ஆண், பள்ளப்பட்டியைச் சேர்ந்த 51 வயது பெண், பள்ளபாளையம் பகுதியைச் சேர்ந்த 46 வயது பெண் உள்ளிட்டோருக்கு நேற்று கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 103 ஆக உயர்ந்துள்ளது. இதில் 85 நபர்கள் குணமடைந்து வீட்டிற்கு திரும்பியுள்ளனர். மற்றவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க:சூரிய கிரகணத்தால் கரோனா வைரஸ் தாக்குதலில் மாற்றம்?