கரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக தங்கவேல் என்பவர் பணியாற்றிவந்துள்ளார். இவர் இன்றுடன் (ஏப்ரல் 30ஆம்) பணி ஓய்வுபெற இருந்தநிலையில், திடீரென பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இன்று ஓய்வுபெற இருந்த முதன்மைக் கல்வி அலுவலர் 'திடீர்' பணியிடை நீக்கம் ஏன்?
கரூர்: மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தங்கவேல் என்பவர் இன்றுடன் ஓய்வுபெற இருந்த நிலையில், ஏப்ரல் 29ஆம் தேதி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
தங்கவேல் ஏன் பணியிடை நீக்கம்?
சேலம் மாவட்டத்தில் தங்கவேல் பணியாற்றும்போது அலுவலக உதவியாளர் நியமனத்தில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டுமே பணி வழங்க வேண்டும். ஆனால், இப்பணியை பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாத ஒரு பெண்ணிற்கு வழங்கியுள்ளதாகவும், இந்த முறைகேட்டை மறைக்க இவர் பணியாற்றும் காலத்திற்கு முன்பே பணி ஆணை வழங்கப்பட்டது போல் ஆவணங்களை மாற்றியுள்ளதாகவும், அடுத்தடுத்து புகார்கள் சென்றுள்ளது. இதனடிப்படையிலேயே இவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.