கரூர் கடைவீதி பசுபதீஸ்வரர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே உள்ள குத்த ரசிகர் தெருவில், சாந்தி என்பவர் வீட்டில் ஐந்து குடும்பங்கள் வாடகைக்கு வசித்து வருகின்றனர். குடியிருப்புவாசி ஒருவர் நேற்று காலை கழிவறையை பயன்படுத்தியபோது அதில் அடைப்பு இருப்பதை அறிந்தார்.
ஸ்கேவஞ்சர் மூலம் கழிவறையை சரி செய்யும்போது பிறந்த சில மணி நேரமே ஆன குழந்தை அதனுள் இருப்பது கண்டறியப்பட்டது. இதுகுறித்து, கரூர் நகர காவல் துறைக்கு தகவல் அனுப்பப்பட்டது.
பின்னர், கரூர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இருப்பினும் கழிவறையில் இருந்தது, யாருடைய குழந்தை என இதுவரை விசாரணையில் தெரியவில்லை. மேலும் குழந்தையை யாரேனும் கழிவறையில் வீசி சென்றிருப்பார்களா என்று மாற்று கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கழிவறையில் கிடந்த பச்சிளம் குழந்தை: இறந்த நிலையில் மீட்பு! அதனை தொடர்ந்து, பிறந்து சில மணி நேரமே ஆன குழந்தை கழிவறைக்குள் உயிரிழந்த நிலையில் இருந்ததை நகராட்சி சார்பாக அலுவலர்கள் எடுத்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.