தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வாரிசு சான்றிதழ் வழங்க லஞ்சம் - அரவக்குறிச்சி வட்டாட்சியர் கைது!

வாரிசு சான்றிதழ் வழங்க 10 ஆயிரம் லஞ்சம் கேட்ட அரவக்குறிச்சி வட்டாட்சியரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர்.

அரவக்குறிச்சி வட்டாட்சியர் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரால் கைது!
அரவக்குறிச்சி வட்டாட்சியர் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரால் கைது!

By

Published : Jul 21, 2022, 4:30 PM IST

கரூர்: அரவக்குறிச்சி தாலுகா சின்னதாராபுரம் இந்திரா நகரைச் சேர்ந்தவர் பழனிசாமி. இவர் தனது தந்தை இறந்தது தொடர்பாக வாரிசு சான்றிதழ் பெற விண்ணப்பம் செய்துள்ளார்.

வாரிசு சான்றிதழ் வழங்க அரவக்குறிச்சி வட்டாட்சியர் 10,000 ரூபாய் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. இதனைக் கொடுக்க விரும்பாத பழனிசாமி, கரூர் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்துள்ளார்.

பின்னர் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரின் வழிகாட்டுதலின்படி, அரவக்குறிச்சி வட்டாட்சியரிடம் இன்று பிற்பகல் 12.15 மணிக்கு ரூ.10,000 ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை பழனிசாமி வழங்கியுள்ளார். அப்போது மறைந்திருந்த கரூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையினர், அரவக்குறிச்சி வட்டாட்சியரை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க:மதுரையில் 27 மணி நேரத்திற்கு மேலாக நடைபெறும் வருமான வரி சோதனை

ABOUT THE AUTHOR

...view details