தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குறுக்கே வந்த குதிரை: கவிழ்ந்து விபத்துக்குள்ளான 108 அவசர ஊர்தி

கரூர்: அரவக்குறிச்சி - கரூர் செல்லும் சாலையில் தகர கொட்டகை பேருந்து நிறுத்தம் அருகில் குதிரை குறுக்கே வந்ததால் 108 அவசர ஊர்தி வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்தனர்.

ambulance accident in karur
ambulance accident in karur

By

Published : Mar 14, 2020, 11:59 PM IST

Updated : Mar 15, 2020, 9:46 AM IST

அரவக்குறிச்சி அரசு மருத்துவமனையில் மூன்று நாள்களாக உள்நோயாளியாக கிழக்குத் தெருவைச் சேர்ந்த பவித்ரா (16) இருந்துள்ளார். அவரின் மேல்சிகிச்சைக்காக, தந்தை மாரிமுத்து, தாய் சுந்தராம்பாள் ஆகியோருடன் 108 அவசர ஊர்தியில் சென்றனர். வாகனத்தை ஓட்டுநர் தினகரன் இயக்கினார். அப்போது அவசர சிகிச்சை உதவியாளர் செல்வம் உடனிருந்துள்ளார்.

அரவக்குறிச்சியிலிருந்து கரூர் அரசு மருத்துவமனை செல்லும் வழியில் தகர கொட்டகை பேருந்து நிறுத்தம் அருகில் நாகராஜ் என்பவருடைய இரண்டு குதிரைகள் சாலையின் குறுக்கே வந்ததில், ஓட்டுநரின் கட்டுப்பாடை இழந்த 108 வாகனம் சாலையின் நடுவில் கவிழ்ந்தது.

தேசிய நெடுஞ்சாலையில் கவிழ்ந்த 108 அவசர ஊர்தி

இவ்விபத்தில் பவித்ரா, மாரியப்பன், தினகரன் ஆகிய மூவருக்கும் லேசான காயம் ஏற்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக அரவக்குறிச்சி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

Last Updated : Mar 15, 2020, 9:46 AM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details