கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே சுப்பிரமணிபுரத்தைச் சேர்ந்தவர்கள் சுயம்பு (58), நாகலிங்கம் (50). இருவரும் உடன் பிறந்த சகோதர்கள் ஆவர். சுயம்புவின் மகளுக்கு அடுத்த மாதம் திருமணம் நடைபெற இருப்பதால் தன் வீட்டை விற்றதாக கூறப்படுகிறது.
இதனால் சுயம்பு-நாகலிங்கம் இடையே கருத்து வேறுபாடுகள் இருந்துவந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் சுயம்பு நேற்று (பிப். 25) தென்னந்தோப்பில் தண்ணீர் பாய்க்கச் சென்றுள்ளார்.
அங்கே வந்த நாகலிங்கம், 'உன் நிலத்தை எனக்குத் தந்துவிடு' எனக் கூறி மிரட்டியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து, சுயம்புவை நாகலிங்கம் ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டிவிட்டுத் தப்பி ஓடிவிட்டதாகக் கூறப்படுகிறது. படுகாயம் அடைந்த சுயம்பு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருதுவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தலைமறைவான நாகலிங்கத்தை ஆரல்வாய்மொழி காவல் துறையினர் தேடிவருகின்றனர். அண்ணனை உடன் பிறந்த தம்பி ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டிய சம்பவம் அப்பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பர்தா அணிந்து வந்து நகை கொள்ளையடித்த நபர்கள் கைது