கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மத்திய அரசைக் கண்டித்து பெண்கள் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெற வேண்டும், பொதுத் துறையை தனியாருக்குத் தாரைவார்க்கக் கூடாது, டெல்லியில் போராடும் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி சுமுகமான தீர்வு ஏற்படுத்த வேண்டும்,
குமரியில் 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பெண்கள் ஆர்ப்பாட்டம்
கன்னியாகுமரி: புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெற வேண்டும் உள்ளிட்ட எட்டு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பெண்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பெண்கள் ஆர்ப்பாட்டம்
ஜனநாயகத்திற்கு எதிரான செயல்களை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும் உள்ளிட்ட எட்டு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதில் 200-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: சாலை வசதி கேட்டு திமுக எம்எல்ஏ ஆஸ்டின் தலைமையில் ஆர்ப்பாட்டம்