கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தோவாளை, செண்பகராமன்புதூர், சீதப்பால், சுற்று வட்டாரப் பகுதிகளில் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்ட நெல் அறுவடைக்குத் தயாராக இருந்தன. இந்தநிலையில், அப்பகுதியிலுள்ள பத்து ஏக்கர் நிலத்தை மேற்குத் தொடர்ச்சி மலையில் இருந்து கூட்டம் கூட்டமாக வந்த காட்டுப் பன்றிகள் நாசம் செய்து விட்டுச் சென்றன.
அறுவடைக்குத் தயாரான நெற்பயிர்கள்; நாசம் செய்த காட்டுப் பன்றிகள்!
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை அருகே அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்களை காட்டுப்பன்றிகள் நாசம் செய்துள்ளன.
அறுவடைக்குத் தயாரான நெற்பயிர்கள்; நாசம் செய்த காட்டுப் பன்றிகள்
அடிக்கடி வரும் காட்டுப் பன்றிகளை விவசாயிகள் விரட்டும்போது, பன்றிகள் எதிர் தாக்குதலில் ஈடுபடுகின்றன. இதன் காரணமாக, காட்டு பன்றிகளை விரட்ட முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். பயிர்களை நாசப்படுத்தும் காட்டுப்பன்றிகளை உடனடியாக விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தோவாளை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:’பாஜகவும் அதிமுகவும் இனி ஒருபோதும் ஆட்சிக்கு வரமுடியாது'