கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் மறைந்த எம்பி வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் போட்டியிடுகிறார். இன்று (மார்ச் 18) விஜய் வசந்த் திமுக, கம்யூனிஸ்ட், கூட்டணிக் கட்சியினருடன் நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகம் வந்து மாவட்டத் தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான அரவிந்திடம் தனது வேட்புமனுவைத் தாக்கல்செய்தார்.
முன்னதாக, கூட்டணிக் கட்சியினருடன் நாகர்கோவில் டெரிக் சந்திப்பிலிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை பேரணியாக வந்தார்.
விஜய் வசந்த் வேட்புமனு தாக்கல் இதேபோல, திமுக சார்பில் நாகர்கோவில் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக மாவட்டச் செயலாளர் சுரேஷ் ராஜன் வேட்புமனு தாக்கல்செய்தார். இவர் நாகர்கோவில் தொகுதியில் தொடர்ச்சியாக மூன்று முறை சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். திமுக ஆட்சிக் காலத்தில் ஒருமுறை சுற்றுலாத் துறை அமைச்சராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:ஏனாம் தொகுதியில் போட்டியிடும் ரங்கசாமியை எதிர்த்து வேட்பாளரை அறிவிக்காத காங்கிரஸ்!