தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கால்கோள் விழாவுடன் தொடங்கிய கிறிஸ்துமஸ் பண்டிகை: கலந்துகொள்ளவிருக்கும் டிடிவி!

கன்னியாகுமரி: நாகர்கோவிலில் வரும் டிச.21ஆம் தேதி நடைபெறவுள்ள ஐக்கிய கிறிஸ்துமஸ் விழாவில் அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் கலந்து கொள்ளவுள்ளனர். இதனால், விழா மேடை அமைப்பதற்கான கால்கோள் விழா நாகர்கோவிலிலுள்ள கன்கார்டியா உயர் நிலை பள்ளி மைதானத்தில் இன்று (டிச.18) நடைபெற்றது.

நாகர்கோவிலில் நடைபெற்ற கால்கோள் விழா
நாகர்கோவிலில் நடைபெற்ற கால்கோள் விழா

By

Published : Dec 18, 2020, 5:35 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வட்டார கிறிஸ்தவ ஐக்கிய பேரவை சார்பாக நாகர்கோவிலில் கன்கார்டியா உயர் நிலை பள்ளி மைதானத்தில் வரும் டிசம்பர் 21ஆம் தேதி மாலை ஐக்கிய கிறிஸ்துமஸ், ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறவுள்ளது.

கால்கோள் விழா தொடக்கம்:

இந்த விழாவில் அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கவுள்ளார். இந்த விழாவிற்க கால்கோள் விழா நாகர்கோவிலில் கன்கார்டியா உயர் நிலை பள்ளி மைதானத்தில் இன்று மாலை நடைபெற்றது.

வட்டார கிறிஸ்தவ ஐக்கிய பேரவை செயலாளர் அருட்பணியாளர் செல்வராஜ் சிறப்பு பிரார்த்தனைகள் செய்து, கிழக்கு மாவட்ட அமமுக செயலாளர் பி. செந்தில் முருகன், இனை செயலாளர் அம்மு ஆன்றோ உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கால்கோள் விழாவை தொடங்கினர்.

டிடிவி குறித்து பேசிய நிர்வாகிகள்:

இது குறித்து வட்டார கிறிஸ்தவ ஐக்கிய பேரவை செயலாளர் அருட்பணியாளர் செல்வராஜ் கூறுகையில், “இது கிறிஸ்துமஸ் விழாவின் கால்கோள் விழா மட்டுமல்ல டி.டி.வி. தினகரன் தமிழ்நாட்டில் அரியணை ஏறுவதற்கான கால்கோள் விழாவும் கூட” என பெருமிதம் தெரிவித்தார்.

நாகர்கோவிலில் நடைபெற்ற கால்கோள் விழா

கிழக்கு மாவட்ட அமமுக செயலாளர் செந்தில் முருகன் கூறுகையில், “அமமுக பொது செயலாளர் டி.டி.வி. தினகரனின் வருகைக்காக குமரி மாவட்ட மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் எழுச்சியுடன் அவரை வரவேற்க தயாராகி வருகின்றனர்” என்றார்.

இதையும் படிங்க: ‘ஹிட்லரைவிட எடப்பாடி பழனிசாமி மோசம்’: டிடிவி தினகரன்

ABOUT THE AUTHOR

...view details