தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 30, 2019, 4:17 PM IST

ETV Bharat / state

குமரியில் படகுப் போக்குவரத்து ரத்து: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்

கன்னியாகுமரி: கடல் சீற்றம் காரணமாக விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலைக்கு படகுப் போக்குவரத்து தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதால், சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

sea rough

கன்னியாகுமரி கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலையை படகில் சென்று ரசிப்பதற்காக ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் குமரிக்கு வருவது வழக்கம். இந்நிலையில், கடந்த சில நாள்களாக குமரியில் கடல் அதிக சீற்றத்துடன் காணப்படுகிறது. மேலும் அலைகளும் பல அடி உயரத்துக்கு எழுகின்றன.

இதன் எதிரொலியாக, கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலைக்குச் செல்லும் பூம்புகார் சுற்றுலாப் படகு சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இருந்தபோதும், படகுப் போக்குவரத்து சேவை மீண்டும் இயக்கப்படும் என்ற நம்பிக்கையில் ஆவலுடன் வரிசையில் சுற்றுலாப் பயணிகள் காத்திருக்கின்றனர்.

sea rough

மேலும், குமரி கடல் பகுதியில் புயல் மையம் கொண்டிருப்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று மாவட்ட மீன்வளத் துறை எச்சரித்துள்ளதை அடுத்து, ஆரோக்கியபுரம் முதல் மணக்குடி வரையிலான கடல் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

ABOUT THE AUTHOR

...view details