தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 8, 2020, 7:00 AM IST

ETV Bharat / state

'அரசு மருத்துவமனையில் உரிய நேரத்தில் உணவு வழங்கப்படும்' - தளவாய் சுந்தரம்

கன்னியாகுமரி: அரசு மருத்துவமனையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நேரத்தில் உணவுகள் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் உறுதியளித்தார்.

சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம்
சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உணவு வழங்காததை கண்டித்து கரோனா தொற்று நோயாளிகள் நேற்று முன்தினம் (ஜூலை 6) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், நாகர்கோவிலில் தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம், மருத்துவக் கல்லூரி முதல்வர் சுகந்தி மற்றும் மருத்துவர்களை சந்தித்து கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தளவாய் சுந்தரம் கூறும்போது, "அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கால தாமதமாக உணவு வழங்கப்பட்டதால் பிரச்னை ஏற்பட்டது. அதிக எண்ணிக்கையில் நோயாளிகள் வந்து கொண்டிருப்பதால் உரிய நேரத்தில் உணவு வழங்குவதில் கால தாமதம் ஏற்பட்டது. இனிமேல் உரிய நேரத்தில் உணவு வழங்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பொதுமக்கள் கண்டிப்பாக முகக் கவசங்கள் அணிந்து தகுந்த இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். மாவட்டத்தில் கரோனா நோயை முற்றிலுமாக தடுப்பதற்கு மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க:கரோனாவுடன் கபடி ஆடிய கடலூர் பாய்ஸ்

ABOUT THE AUTHOR

...view details