தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 22, 2019, 8:37 PM IST

ETV Bharat / state

குமரியில் மழைக்காக ஒன்றுபட்ட மும்மதங்கள்!

கன்னியாகுமரி :மார்த்தாண்டத்தில் அதிமுக சார்பில் வெட்டுவந்நி ஸ்ரீ தர்ம சாஸ்தா கோவில், அந்தோனியார் தேவாலயம், தக்கலை பீரப்ப தர்க்கா பள்ளிவாசலிலும் மழை வேண்டி சிறப்பு பூஜை நடைபெற்றது.

PRAYER

மழை வேண்டி தமிழ்நாடு முழுவதும் அதிமுகவினர் கோயில்களில் சிறப்பு பூஜைகள், யாகங்கள் நடத்திவருகின்றனர். இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்ட அதிமுக சார்பில் மும்மத பிராத்தனை நடத்தினர். இதன் ஒரு பகுதியாக வெட்டுவேனி புனித அந்தோணியார் திருத்தலத்தில் மெழுகுவர்த்தி ஏற்றி சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.

மழைக்காக ஒன்றுபட்ட மும்மதங்கள்

அதைத் தொடர்ந்து வெட்டுவந்நி ஸ்ரீ தர்மசாஸ்தா ஆலயத்தில் சிறப்பு அர்ச்சனை, வழிபாடு நடத்தினர். பின்னர் தக்கலை மேட்டுக்கடை பீர் முகமது தர்காவில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. மழை வேண்டி நடந்த இந்த மும்மத பிரார்த்தனையில் ஏராளமான அதிமுகவினர் கலந்துகொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details