தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அஞ்சல் துறை சார்பில் கண்காட்சி தொடங்கியது

கன்னியாகுமரி: நாகர்கோவிலில் தபால் துறை சார்பில் மூன்று நாள்கள் நடைபெறும் நாணயம், தபால் தலை மற்றும் அஞ்சல் துறை சார்ந்த கண்காட்சி நேற்று தொடங்கியது.

Scott Christian College Nagercoil
Stamp Exhibition

By

Published : Dec 6, 2019, 1:07 PM IST

நாகர்கோவிலில் அஞ்சல் துறை சார்பில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக தபால்துறை கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன இதனையொட்டி நேற்று நாகர்கோவில் தனியார் கல்லூரியில் மூன்று நாள் கண்காட்சி நடத்தப்பட்டது. நேற்று தொடங்கிய கண்காட்சியில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பழங்கால நாணயங்கள், தபால் தலைகள் மற்றும் அரியவகை ரூபாய் நோட்டுகள் காட்சிப்படுத்தப்பட்டன.

தபால் துறையின் தென்மண்டல இயக்குனர் சோமசுந்தரம் கலந்துக்கொண்டு கன்னியாகுமரி மாவட்டத்தின் பாரம்பரியமிக்க திற்பரப்பு அருவி, குளச்சல் போர் நினைவு ஸ்தூபி, ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி போன்றவற்றின் தபால் தலைகளை வெளியிட்டார் இந்த கண்காட்சியை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் கண்டு கழித்தனர்.

அஞ்சல் துறை சார்பில் மூன்று நாள் கண்காட்சி.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் இமெயில் இன்டர்நெட் போன்றவற்றின் வருகையால் தபால்தலைகள் மங்கிப் போய் விடக்கூடாது என்பதற்காக மாணவ மாணவிகளிடையே வினாடி-வினா போன்ற பல்வேறு போட்டிகளை நடத்தி அதனை ஊக்கப்படுத்தி வருவதாகத் தெரிவித்தார்.

இதையும் படிக்க: திருநங்கைகளுக்கான உலக அழகிப் போட்டி: தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் பங்கேற்பு!

ABOUT THE AUTHOR

...view details