தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

‘கோலம் போட்டவர்கள் பாகிஸ்தான் பயங்கரவாதிகளிடம் பயிற்சி எடுத்தவர்கள்’ - பொன். ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு

குமரி: குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக கோலம் போட்டவர்கள் பாகிஸ்தான் பயங்கரவாதிகளிடம் பயிற்சி பெற்றவர்கள் என்று பொன். ராதாகிருஷ்ணன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

By

Published : Jan 3, 2020, 5:53 PM IST

கோலம் போட்டவர்கள் தீவிரவாதிகள்  பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு  குடியுரிமை திருத்தச் சட்டம்  கன்னியகுமாரி மாவட்டத் செய்திகள்  பொன் ராதாகிருஷ்ணன் பேட்டி  pon radhakrishnan interview  kolam pottavarkal terrorist
கோலம் போட்டவர்கள் பாகிஸ்தான் பயங்கரவாதிகளிடம் பயிற்சி எடுத்தவர்கள்- பொன். ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "தமிழ்நாட்டில் காங்கிரஸ் மற்றும் திமுக, இந்திய குடியுரிமை சட்டம் குறித்த விஷம பிரசாரத்தை கையில் எடுத்து போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

திமுக அரசியல் ஆதாயத்திற்காக நடத்தும் இந்த போராட்டங்களால் அவர்களும் அவர்களை நம்பி செல்பவர்களும் அழிவுக்கு ஆளாவார்கள். திமுகவினர் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக எது வேண்டுமானாலும் செய்வதற்கு தயாராகிவிட்டார்கள்.

இரண்டு விலங்குகள் சண்டையிடும் போது அதன் ரத்தத்தைக் குடிக்க ஓநாய் துடிப்பது போன்று சிறுபான்மை, பெரும்பான்மை மக்கள் இடையே மோதலை ஏற்படுத்தி வருகிறார்கள். சிறுபான்மையினர் நடத்தும் போராட்டங்கள் போன்று பெரும்பான்மையினரும் ரோட்டுக்கு வந்து போராட ஆரம்பித்தால் என்ன நடக்கும்?

1967ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வர எம்ஜிஆரை துப்பாக்கியால் சுட்டவர்கள். அதன் பின்னணி இன்னும் விளக்கப்படவில்லை. பெருந்தலைவர் காமராஜர் போட்டியிட்ட நாகர்கோவில் தொகுதியில் கிட்டு என்ற வாலிபரை திமுகவினர் கொலை செய்துவிட்டு அந்தப் பழியை காமராஜர் மீது போட்டார்கள்.

கோலம் போட்டவர்கள் பாகிஸ்தான் பயங்கரவாதிகளிடம் பயிற்சி எடுத்தவர்கள்- பொன். ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு

எனவே, திமுகவை நம்பி யாரும் ஏமாந்து போகக்கூடாது. பாஜகவில் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட தொண்டர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இப்போது நெல்லை கண்ணன் பொதுமேடையில் பிரதமரையும் உள்துறை அமைச்சரையும் கொலை செய்யவேண்டும் என்று கூறியுள்ளதன் பின்னணியை விசாரிக்க வேண்டும். உள்ளாட்சி தேர்தலில் மக்களின் தீர்ப்பை தலைவணங்கி ஏற்றுக் கொள்கிறோம்" என்றார்.

இதையும் படிங்க: மோடி குறித்து இழிவாகப் பேசிய நெல்லை கண்ணன் சேலம் சிறையில் அடைப்பு!

ABOUT THE AUTHOR

...view details