தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குமரியில் கல்லூரி 3ஆம் ஆண்டு மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் - மாவட்ட ஆட்சியர்

கன்னியாகுமரி: குமரி மாவட்டத்தில் கல்லூரிகளில் படிக்கும் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெறுவதற்காக விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் மா. அரவிந்த் அறிவித்துள்ளார்.

கன்னியாகுமரி
கன்னியாகுமரி

By

Published : Dec 9, 2020, 11:43 AM IST

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களின்கீழ் அரசு மற்றும் அரசு உதவிபெறும் கலை அறிவியல் கல்லூரிகளில் மூன்றாம் ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படிக்கும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கிவருகிறது.

அதன்படி முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற படிப்புகளுக்கு மாணவர்களின் பெற்றோர் ஆண்டு வருமானம் இரண்டு லட்சத்திற்கும் அதிகமாக இருக்கக் கூடாது.

மேலும் மாணவர்கள் கல்வி உதவித்தொகை கோரி விண்ணப்பிக்கும் படிவத்தை சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களே பெற்று கல்வி நிலையங்களில் சமர்ப்பிக்க வேண்டும்.

எனவே கல்வி நிறுவனங்கள் புதுப்பித்த கல்வி உதவித்தொகைக்கு வருகின்ற 31ஆம் தேதிக்குள் இணையதளம் மூலம் விண்ணப்பித்து ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்புகொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இதையும் படிங்க: இளம்பெண்கள் வீட்டில் அடைத்துவைக்கப்பட்ட விவகாரம்: காணொலி ஆதாரத்துடன் விளக்கிய அனிதா குப்புசாமி!

ABOUT THE AUTHOR

...view details