தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விஸ்வகர்மா சமுதாயத்திற்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும்

கன்னியாகுமரி: தமிழ்நாடு விஸ்வகர்ம கைவினைஞர்கள் சங்கம் சார்பில் விஸ்வகர்ம ஜெயந்தி விழா ரதபவனி கோலாகலமாக நடைபெற்றது.

By

Published : Sep 16, 2019, 1:28 PM IST

விஸ்வகர்ம ஜெயந்தி விழா ரத பவனி

நாளை உலகம் முழுவதும் விஸ்வகர்ம ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் தமிழ்நாடு விஸ்வகர்ம கைவினைஞர்கள் சங்கம் சார்பில் விஸ்வகர்ம ஜெயந்தி விழா விஸ்வகர்ம ரத பவனியுடன் தொடங்கியது. மேள தளாங்கள் முழங்க விஸ்வகர்ம ரத பவனி மீனாட்சிபுரத்தில் இருந்து தொடங்கி மணிமேடை, அண்ணா பேருந்து நிலையம், கோட்டார் வழியாக சென்று மீண்டும் மீனாட்சிபுரத்தில் வந்து நிறைவு பெற்றது.

விஸ்வகர்ம ஜெயந்தி விழா ரத பவனி

இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்ட அந்த அமைப்பின் மாநில பொதுச்செயலாளர் செல்வராஜ் கூறுகையில், விஸ்வகர்மா ஜெயிந்தி தினமான செப்டம்பர்17ஆம் தேதி மற்ற மாநிலங்களில் விடுமுறை அளித்துள்ளதை போன்று தமிழ்நாட்டிலும் விடுமுறை அளிக்க வேண்டும்.

மேலும் மற்ற மாநிலங்களில் நடத்தபடுவது போன்று விஸ்வகர்மா ஜெயந்தி தினத்தை அரசு விழாவாக நடத்த வேண்டும். அண்டை மாநிலமான கேரளாவில் எங்கள் சமுதாயத்திற்கு மூன்று சதவிகித இட ஒதுக்கீடு வழங்கியதை போன்று தமிழக அரசும் வழங்க வேண்டும் என்றார்.

ABOUT THE AUTHOR

...view details