குமரி மாவட்டம், நாகர்கோவிலில் நடைபெற்ற சமத்துவ மக்கள் கட்சியின் தென் மண்டல பொறுப்பாளர் கூட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் தலைவர் நடிகர் சரத்குமார் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
தமிழ்நாடு அரசியலில் வெற்றிடம் இன்னும் நீடித்துக் கொண்டிருக்கிறது - சரத்குமார்
கன்னியாகுமரி: குமரி மாவட்டம் நாகர்கோவிலில் நடைபெற்ற சமத்துவ மக்கள் கட்சியின் தென் மண்டல பொறுப்பாளர் கூட்டத்தில் கட்சியின் தலைவர் நடிகர் சரத்குமார், மாநில மகளிர் அணிச் செயலாளர் நடிகை ராதிகா சரத்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது சரத்குமார் கூறியதாவது, 'கூட்டணிக் கட்சிகளின் சின்னத்தில் போட்டியிடும் போது நமது கட்சியின் தனித்துவம் இல்லாமல் போய்விடுகிறது. சில கருத்து வேறுபாடுகள் வரும்போது சில திட்டங்களைத் செயல்படுத்தும்போது நாம் கருத்து சொல்ல உரிமை இல்லாமல் போய்விடுகிறது. தனி சின்னத்தில் போட்டியிட்டால் தான் சுதந்திரமாக செயல்பட முடியும்.
திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தலில் வெற்றி பெற்றதுபோல் பேசுகிறார். கல்விக்கடன், விவசாயக் கடன்களையும் 100 நாள்களில் பொதுமக்கள் பிரச்னைகளையும் தீர்ப்பேன் என்று அவர் கூறுகிறார். அவர்கள் ஏற்கெனவே பல காலம் ஆட்சியில் இருந்தபோது தீர்க்காததை, இப்போது தீர்ப்பேன் எனக் கூறுவது சாத்தியமில்லை. அது வெறும் தேர்தல் வாக்குறுதி தான்.
டெல்லியில் விவசாயிகள் போராடி வருகின்றனர். வேளாண் திருத்தச் சட்டங்கள் குறித்து புரிதல் ஏற்படுத்த வேண்டும். எந்த ஒரு சட்டத்தையும் மறுபரிசீலனை செய்யலாம் என்பதுதான் என் கருத்து. மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், அதனை நிறைவேற்ற முன் வரக்கூடாது.
இதையும் படிங்க: சரத்குமார் செல்போன் எண்ணை நகல் எடுத்து பேசிய பொறியாளர் மீது புகார்!