தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோயில்களில் ஊழியர்கள் பற்றாக்குறை: கோயில் நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்!

கன்னியாகுமரி: ஊழியர்கள் இல்லாத கோயில்களில் பணிபுரிய ஊழியர்களை நியமிக்க வலியுறுத்தியும், கோயில் நிர்வாகத்தை கண்டித்தும் ஆலய ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோயில் நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்
கோயில் நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

By

Published : Nov 5, 2020, 6:10 PM IST

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள 490 திருக்கோயில்களில், ஆயிரத்து 36 ஊழியர்கள் பணிபுரிந்து வந்த நிலையில் தற்போது 505 பேர் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனர். இதனால், பெரும்பாலான கோயில்களில் பணி செய்ய ஊழியர்கள் இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து கன்னியாகுமரி மாவட்ட ஆலய ஊழியர்களின் சங்கம் சார்பில் சுசீந்திரம் இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில், “ ஊழியர்கள் இல்லாத அனைத்து கோயில்களிலும் ஊழியர்களை நியமிக்க வேண்டும். 1999, 2009, 2019 ஆகிய ஆண்டுகளில் அறிவித்தபடி ஊழியர்களுக்கு நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். முறையான பணிமூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும்” உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் குமரி மாவட்ட கோயில்களில் நிர்வாகத்தை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில், ஆலய ஊழியர்கள் சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள், ஆலய ஊழியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: தேய்மானம் காரணமாக நகைகள் எடை குறைவு: ராமநாதசுவாமி கோயில் நிர்வாகம் அறிக்கை

ABOUT THE AUTHOR

...view details