தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தனியாக வாங்குகிறாயா? பொது இடத்தில் அடிவாங்குகிறாயா? வைரல் வீடியோ

கன்னியாகுமரி: பாலியல் தொந்தரவு தந்த இளைஞரை இளம்பெண் ஒருவர் தனியாக அடிவாங்குகிறாயா? பொது இடத்தில் அடிவாங்குகிறாயா? என்று கூறிக்கொண்டே தாக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

பாலியல் தொந்தரவு தந்த இளைஞர்

By

Published : Aug 25, 2019, 11:06 AM IST

கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் பகுதியில் வசிக்கும் இளம்பெண் வீட்டருகே, அதேப் பகுதியைச் சேர்ந்த திருமணமான இளைஞர் ஒருவர் பழங்களை வைக்கும் குடோன் வைத்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக அந்த இளைஞர், அந்த இளம்பெண்ணிற்கு போனிலும், நேரிலும் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

தனியாக அடிவாங்குகிறாயா? பொது இடத்தில் அடிவாங்குகிறாயா? வைரல் வீடியோ

இதனால் விரக்தியடைந்த அந்தப் பெண் இளைஞருக்கு தக்க பாடம் புகட்ட நினைத்தார். அதன்பேரில் நேற்று அந்த இளைஞரை செல்போனில் தொடர்புக் கொண்ட இளம்பெண் தனியாக வரச்சொல்லியுள்ளார். இதை நம்பிச் சென்ற அவரை இளம்பெண் சரமாரியாக கன்னத்தில் அறைந்தார்.

மேலும் என்னிடம் தவறாக பேசியதற்காக என்னிடம் இங்கேயே அடி வாங்குகிறாயா? அல்லது ஊருக்கே தெரியும் வகையில் பொது இடத்தில் வைத்து அடி வாங்குகிறாயா? என்று கேட்டுக்கொண்டே தாக்கியதோடு மட்டுமல்லாமல் அதை தனது செல்போனிலும் படம் பிடித்துள்ளார். இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ABOUT THE AUTHOR

...view details