தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெண் வழக்குரைஞருக்கு சைகை காட்டிய இளைஞர் கைது!

கன்னியாகுமரி: பெண் வழக்குரைஞருக்கு சைகை காட்டி தொந்தரவு கொடுத்த இளைஞனை பொதுமக்கள் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

harassment
Sexual harassment for women lawyer

By

Published : Jun 6, 2020, 12:36 AM IST

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பார்வதிபுரம் பகுதியை சேர்ந்த அரசு பெண் வழக்கறிஞர் ஒருவர் அத்தியாவசிய பொருள்கள் வாங்க நாகர்கோவிலுக்கு தனது காரில் சென்றபோது அவரை பின் தொடர்ந்து சென்ற இளைஞர் சிரித்து சைகை காட்டியதோடு அவர் செல்லும் இடம் எல்லாம் பின் தொடர்ந்து சென்றுள்ளார்.

தன்னை பின் தொடரும் இளைஞர் தனது நீதிமன்ற வழக்கு குறித்து ஏதாவது பேச நினைக்கிறாரோ என நினைத்த வழக்குரைஞர் நாகர்கோவில் மாநகரின் முக்கிய சந்திப்பான மணிமேடை சந்திப்பில் தனது காரை நிறுத்தி இளைஞனை அழைத்து பேசிய போது தனது இருசக்கர வாகனத்தில் ஏறும் படி அழைப்பு கொடுத்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த வழக்குரைஞர் சப்தம் இட்டதால் அங்கிருந்த பொதுமக்கள் அந்த இளைஞனை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த கோட்டார் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில் இளைஞரின் பெயர் ஜெகன் என்பதும், இவர் இதே போன்று பல பெண்களிடம் தவறாக நடக்க முயற்சித்ததும் தெரிய வந்துள்ளது.

இதையும் படிங்க:'குழந்தை தொழிலாளர்களுக்கு நீதி மறுப்பு'- வழக்குரைஞர் ஆதங்கம்!

ABOUT THE AUTHOR

...view details